காமாட்சி நாயகன்

கண்டா காமாட்சி நாயகன் கதை

கண்டா காமாட்சி நாயகன் என்ற சொல்லை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நேராய் பார்க்கும்போது நன்றாக பழகுவார்கள் பேசுவார்கள். நகர்ந்து போனதும் அடுத்த நிமிடம் நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்கள். அப்படிபட்டவர்களை அவன் என்னப்பா கண்டா காமாட்சி நாயகன் என்பார்கள்.

ஏன் அப்படி என்று யோசித்தேன். காமாட்சி நாயகன் யார்? பரமசிவன். அவர் ஆசு தோஷி. அவரைக் குறித்து யார் தவம் செய்தாலும் அவர் மனம் இரங்கி விடுவார். அப்படி வரம் பெற்றவர்கள் அப்புறமாய் தேவர்களை பாடாய்ப் படுத்தி தேவர்கள் பிரம்மா விஷ்ணு இவர்களை ராசிக்கு அழைத்து கடைசியில் வரம் கொடுத்த நமது ஆசு தோஷி பரமசிவனிடம் வந்து முறையிடுவார்கள். காமாட்சி நாயகனான அவரும் யார் அந்த அசுரன் என்று தான் வரம் தந்ததையே சுத்தமா மறந்திருப்பார் இவர்கள் ஞாபகப்படுத்தியதும் அதன்பின் அந்த வரத்தை முறிக்க வழி சொல்லி பின்பு மஹாவிஷ்ணு அவதாரம் எடுத்து அசுரரை அழிப்பது தனிக்கதை ! நீங்கள் அறிந்ததுதான்.

இப்போது புரிகிறதா கண்டா காமாட்சி நாயகன் கதை?

(நாகசுந்தரம்)
😄

Related Posts

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
தயவு செய்து வேண்டாமே!!!
0
Would love your thoughts, please comment.x
()
x