அருள்(கவி) மாறல் பதிகம்

(அருட்கவி பூஜ்யஸ்ரீ சிதானந்த நாதர் புகழ்)

திருத்தணியில் உதித்த குரு
அருட்கவியை அணைத்த உரு
மருட்பகையை மிதித்த திரு
வருள் தனக்கு கதித்த வகை கேளாய்

விருப்ப முடன் சிரத்தில் உறை
அடியுனதை வைத்த குரு நாதா
கருக் குழியில் குதித்து சிறை
அடைக்க நினை யாதே

திருத்தணியில் உதித்த குரு…….

வெண்மை உரு அண்மை இரு
கன்ம மதை கெடுக்கும் குரு நாதா
தண்மை குணம் தமிழ் மொழியில்
உண்மை வளர் சொல்லை கொடுவீரா

திருத்தணியில் உதித்த குரு…….

திருத்தணியில் பெருத்த உடல்
அருட்கவியை அணைத்த தணல்
சிவத்த குரு சிரத்தில் வைத்து
பவத்தை துடைத்த குரு நாதா

திருத்தணியில் உதித்த குரு…….

துன்மதை துடைத் தழித்த
இன்பம் அருள் இனிய குரு நாதா
கன்மமதை கழற்றி விடும்
கடமை தனை கையில் எடுத்தோனே

திருத்தணியில் உதித்த குரு…….

நினைத்த செயல் நடத்தும் அருள்
பனைத்த கண்கள் பார்க்கும் உரு
கனைக்கும் பரி கழுத்தில் உறும்
மந்திரத்தை அருளும் திரு வாளா

திருத்தணியில் உதித்த குரு…….

பத்ததியை படைத்த குரு
நித்தியமும் நினைக்கும் வகை
சத்தியமாய் சொல்லும் பொருள்
பத்திரமாய் சிரமதனில் கொளவேணும்

திருத்தணியில் உதித்த குரு…….

சங்கததற்கு அடுத்த படி
பொங்கி வரும் புனலுமது
தங்கமென தகதகக்கும்
எங்கும் நிறை பொருள் கேளாய்

திருத்தணியில் உதித்த குரு…….

அனந்த குரு அவர் தனக்கு
அருள் பொருளாய் அளித்தவராம்
இருள் கனக்கும் கொடிய பகை
அருள் கனலாய் கெடுத்த குரு நாதா

திருத்தணியில் உதித்த குரு…….

சிவத்தினது திருஷ்டியினை
பவமதனை தொலைக்கும் படி
நவனவமாய் பொருளை தர
உவந்தளித்த உயர் தீரா

திருத்தணியில் உதித்த குரு…….

தணல் குஹனின் தத்துவத்தை
மணல் மணலாய் விரித்து பொருள்
கொடுத்த குரு குவலயத்தில் அருட்
கவியாம் அவர் மகிமை கேளாய்

திருத்தணியில் உதித்த குரு…….

தினம் தினமும் அவர் புகழை
நினைத்த நிலை இருந்திடவே
அனைத்து வகை அருளும் உந்தன்
மனத்து வரும் இருள் போகும்

திருத்தணியில் உதித்த குரு…….

Related Posts

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
தயவு செய்து வேண்டாமே!!!
0
Would love your thoughts, please comment.x
()
x