ஐ டி ஆபீசர் !

காலயில எந்திரிச்சி

காப்பி குடித்து விட்டு

கம்யூட்டர் முன்னாடி

பாஸோட பேசணும்னு

தலை வாரி உட்கார்ந்தா

தலை வர தாமதம்னு

வாட்ஸ்அப்பில் விவரம் வரும்!

சரி உட்கார்ந்தது உட்கார்ந்தோம்

சரி செய்வோம் சோர்ஸ் கோடன்னு

வரி வரியா படிச்சு வைச்சு

குறிப்பு எடுக்கும் போது

டீம் லீடர் மெசேஜ்

டபக்குண்ணு

வந்து விழும்!

என்னாச்சு ஏதும் பிரச்சனையா

நெஞ்சார கேட்பார்ன்னு

நினைச்சா நினைப்பில்

மண்ணு விழும்!

கோடு என்னாச்சு

கொடுக்கணும்னு கேட்பாரு!

ஜூம் மீட்டிங் போட்டுடரேன்,

அனைவரும் வருகன்னு

லிங்க்க அனுப்பிடுவார்!

குளிக்க மாட்டான் சாப்பிட மாட்டான்

கும்பிடவோ நேரமில்லை

கிச்சன் உள்ளருந்து

குரல் ஒண்ணு காதில் விழும்!

வரேம்மா என்று சொல்லி

சமாதானம் செய்ய வேணும்!

இதற்குள் மீட்டிங் லிங்கு வர

முகத்தை சரி செய்து

மைக்க செக் செய்து

பட்ஸ காதில் வைத்து

பவிசாக உட்காரணும்!

ஒவ்வொருத்தரா வந்து சேர

மணிக்கணக்கா மீட்டிங் ஓடும்!

அசைன் செய்த வேலையெல்லாம்

அடுக்கி சொல்ல வேணும்!

கிடைத்த இடைவெளியில்

தட்டில் விழுந்த சப்பாத்தி

திண்ணு வச்சு எழுந்திரிச்சா

பாஸ் வராருண்ணு

மெசேஜ் பாஸாகும்.

வந்தவரு கேட்பாரு

வராதவங்க யாருன்னு!

பாஷணம் கொடுத்து விட்டு

பகலிரவா வொர்க் பண்ணு

பத்து தேதிக்குள்ள

பாஸ் பண்றேன் சாலரின்னு

பஞ்ச் டயலாக்க

பேசிவிட்டு செல்வாரு!

அடுத்த அஞ்சு நிமிஷம்

அஜெண்டா வந்து விடும்!

நமக்கென்ன ஒர்க்குன்னு

தேடி எடுத்து விட்டு

தீவிரமா வொர்க் பண்ணி

சாயந்திரம் ஆகி விடும்

செய்து முடித்து விட!

ஆர்டர் செய்த பர்கருடன்

அம்மாவின் காபியோடு

அருந்தி விட்டு அப்பாடின்னு

அசைந்து உட்கார்ந்தா

அடுத்த அசைன்மெண்டு

தொடுத்து விடும்

மேற்கொண்டு!

அப்படியே பொழுது இருட்டி விடும்.

இரண்டு மணி வரைக்கும்

பிராஜக்ட் வேலையில

பிஸியாக இருந்து விட்டு

பத்து நிமிடம்

ஆன்லைன் விளையாட்டு

ஆரம்பம் செய்து விட

அப்போது பார்த்துதானா

அப்பா வர வேண்டும்?

என்னப்பா தூங்கலையா

எப்போதும் விளையாட்டு

உடம்பு என்னாகும்?

பிசிய மூடிவிட்டு

படுத்தா தூக்கம் இல்ல!

அடுத்த நாள் எழுந்திரிச்சி….

தொடரான பயணம் இது,

ஐ டி ல அதிகம் பணம்னு

அனைவரும் சொல்றாங்க,

கொடுக்கும் பணத்துக்கு

கொட்டி விழும் முடியோட

நெட்டி எடுக்கும் வேலையிது

எப்போது முடியும்னு

எங்க யாருக்கும் தெரியாது!

 

 62 total views,  1 views today

தயவு செய்து வேண்டாமே!!!
1
0
Would love your thoughts, please comment.x
()
x